தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தொகையைக் குறிப்பிடாமல் நிவாரணம் பற்றி தகவல் தெரிவித்த விராட் கோலி!

நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூகவலைத்தளங்களில் விமரிசிக்கப்படுவதால் தான் வழங்கிய தொகை எத்தனை என்று விராட் கோலி குறிப்பிடவில்லை.

News image
Updated On :30 மார்ச் 2020, 6:26 am

கரோனா நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நிவாரண நிதி வழங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 33,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் பொது நிவாரண நிதிக்குக் குறிப்பிட்ட தொகையைத் தானும் அனுஷ்கா சர்மாவும் வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அளிக்கும் நிவாரண நிதி அவர்களுடைய வலியை ஓரளவு போக்கும் என நம்புகிறோம் என்று கோலி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூகவலைத்தளங்களில் விமரிசிக்கப்படுவதால் தான் வழங்கிய தொகை எத்தனை என்று விராட் கோலி குறிப்பிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.