நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இந்திய அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு

இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :18 நவம்பர் 2020, 4:52 am

DIN

இந்திய அணிக்காகவும் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சுதீப் தியாகி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது தியாகி, இந்திய அணிக்காக 2009-2010 ஆகிய இரு ஆண்டுகளிலும் 4 ஒருநாள் ஆட்டங்களிலும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடியுள்ளார். 41 முதல்தர ஆட்டங்களில் 109 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 2009, 2010 ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற தியாகி, மொத்தமாக 14 ஆட்டங்களில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுதீப் தியாகி அறிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்கிறேன். தோனியின் தலைமையின் கீழ் என்னுடைய முதல் ஒருநாள் ஆட்டத்தை விளையாடினேன். அவருக்கு என்னுடைய நன்றி. கயிப், ஆர்பி சிங், ரெய்னா ஆகியோர் எனக்குப் பெரிய ஊக்கமாக இருந்துள்ளார்கள் என்று தனது ஓய்வு அறிவிப்பு குறித்த அறிக்கையில் கூறியுள்ளார் சுதீப் தியாகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.