ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காதல் ஜோடியை சேர்த்து வைத்த இந்தியா, ஆஸ்திரேலியா ஆட்டம்! (விடியோ)

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் மலர்ந்த காதல் ஜோடி பல்லாயிரக்கணக்கான மனங்களை வென்றுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 2:20 pm

DIN


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தின் இடையே மைதானத்தில் மலர்ந்த காதல் ஜோடி பல்லாயிரக்கணக்கான மனங்களை வென்றுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகை ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். வியப்பளிக்கும் வகையில் தனது காதலை வெளிப்படுத்தினார் அந்த ரசிகர்.

இதில் உறைந்துபோன அந்த ரசிகை சில வினாடிகள் ஆச்சரியத்தில் மிதந்தார். இதன்பிறகு, அவரது காதலை ஏற்றுக்கொண்ட அந்த ரசிகை, அவரைக் கட்டியணைத்து தனது சம்மதத்தை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, இருவரும் அன்பு முத்தத்தைப் பரிமாறிக்கொண்டனர்.

இதைக் கண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் கைதட்டி ஊக்கமளித்தார்.

மைதானத்தில் இணைந்த காதல் ஜோடியை தொலைக்காட்சிகளில் கண்ட இந்திய ரசிகர்கள், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.