ஐபிஎல் அட்டவணை எப்போது வெளியிடப்படும்?
ஐபிஎல் தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை...


இந்த வருடத்துக்கான ஐபிஎல் அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் சேர்மன் தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல் தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை செப்டம்பர் 6 அதாவது நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...