2023 உலகக் கோப்பை, லார்ட்ஸ் மைதானம்...: ஸ்ரீசாந்த் கனவு
என்னை அழையுங்கள். உலகின் எந்தப் பகுதிக்கும் வந்து விளையாடத் தயாராக இருக்கிறேன்.


உலகின் எந்தப் பகுதியிலும் விளையாட நான் தயாராக உள்ளேன் என வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார். அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம். அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்நிலையில் உலகின் எந்தப் பகுதியிலும் விளையாடத் தயாராக உள்ளதாக ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
என்னை அழையுங்கள். உலகின் எந்தப் பகுதிக்கும் வந்து விளையாடத் தயாராக இருக்கிறேன். கிளப் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ஏஜெண்ட்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பாக நான் விளையாட வேண்டும். எம்சிசி, ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் ஆட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...