பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல் போட்டியில் 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்!

20-வது ஓவரின் கடைசிப் பந்தில் யார் விளையாடினாலும் அவர் சிக்ஸர் தான் அடிக்க வேண்டும் என்று...

News image
Updated On :16 செப்டம்பர் 2020, 10:03 am

DIN

ஐபிஎல் போட்டியைப் பலரும் விரும்பிப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம் - சிக்ஸர் மழை.

கடந்த வருடம் ரஸ்ஸல் அடித்த சிக்ஸர்களை யாரால் மறக்க முடியும்? கடைசி ஓவரில் தோனி விளையாடினாலே அனைவரின் மனமும் சிக்ஸர்களைத் தானே விரும்பும்?

அதுவும் 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் யார் விளையாடினாலும் அவர் சிக்ஸர் தான் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை அதிக முறை பூர்த்தி செய்த வீரர்கள் யார் யார்?

20-வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

8 - தோனி (34 பந்துகள்)
4 - பென் கட்டிங் (5)
4 - ரோஹித் சர்மா (13)
4 - பொலார்ட் (17)

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.