புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள்: பயிற்சியில் பட்டையைக் கிளப்பும் தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் அடித்து மிரட்டி வருகிறார்.

News image
Updated On :6 மார்ச் 2020, 1:42 pm


ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து 5 சிக்ஸர்கள் அடித்து மிரட்டி வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்கானப் பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அதுவும் 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி கிரிக்கெட் பக்கம் தலை காட்டாததால், அவருடைய வருகை மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், பயிற்சியின்போது தோனி அடுத்தடுத்த பந்துகளில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த விடியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் இந்த விடியோவைக் கொண்டாட சமூக ஊடகங்களில் அது வைரலாகத் தொடங்கியது.

எனவே, தன்னுடைய பேட்டிங் திறன் குறித்து கேள்வி எழுப்பிய விமரிசகர்களுக்கு வரும் ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங் மூலமே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.