ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.
வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த இணை ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன்மூலம், இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்க்க இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
லிட்டன் தாஸ் 143 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 176 ரன்கள் எடுத்தார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும். இந்தத் தொடரில் இவர் அடிக்கும் இரண்டாவது சதம் இது. அதேசமயம், இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வங்கதேச வீரர் என்ற தமிம் இக்பாலின் (கடந்த ஆட்டத்தில் 158 ரன்கள் அடித்தது) சாதனையையும் இவர் முறியடித்துள்ளார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிம் இக்பால் 109 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 128 ரன்கள் எடுத்தார். இது இவரது 13-வது ஒருநாள் கிரிக்கெட் சதமாகும்.
முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 292 ரன்கள் சேர்த்ததன்மூலம், வங்கதேச அணி சார்பில் எந்தவொரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிக பாட்னர்ஷிப் என்ற சாதனையையும் இந்த இணை புரிந்துள்ளது. முன்னதாக, 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது ஷகிப் அல் ஹசனும், மஹமதுல்லாவும் 224 ரன்கள் சேர்த்ததே வங்கதேசத்தின் அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக இருந்தது.
இதனிடையே, 32.2-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
இதன்மூலம், 43 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 43 ஓவர்களில் 342 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


