புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால்ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா?---கங்குலி விளக்கம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிசிசிஐ

News image
Updated On :6 மார்ச் 2020, 9:55 pm

கொல்கத்தா: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை அவா் சந்தித்து கூறியதாவது:

ஐபிஎல் இம்மாதம் 29-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும். அனைத்து நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இதனால் ஒரு பிரச்னையும் எழவில்லை. உலகம் முழுவதும் ஒரு நாட்டு அணி இன்னொரு நாட்டுக்குச் சென்று விளையாடி வருகிறது என்றாா் கங்குலி.

அவரிடம், ஐபிஎல் போட்டியில் கரோனா வைரஸால் விளையாட்டு வீரா்களும், ரசிகா்களும் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு கங்குலி பதிலளித்து கூறியதாவது:

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எந்த மாதிரியான நடவடிக்கைகள் என்று கேட்டால் அதை சரியாக இப்போது கூற முடியவில்லை. மருத்துவக் குழுதான் அதை எங்களிடம் தெரிவிக்கும். அதன்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் கங்குலி.

கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இத்தாலியில் விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஒலிம்பிக்கை முன்னிட்டு நடத்தப்பட இருந்த சில போட்டிகள் ஒத்திவைக்கவும், சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.