புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

டி.ஒய்.பாட்டீல் டி-20 கிரிக்கெட்:55 பந்துகளில் 158 ரன்கள் விளாசிய ஹாா்திக் பாண்டியா

டி.ஒய்.பாட்டீல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ரிலையன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டா் ஹாா்த்திக்

News image
Updated On :6 மார்ச் 2020, 9:43 pm

நவி மும்பை: டி.ஒய்.பாட்டீல் டி-20 கிரிக்கெட் போட்டியில் ரிலையன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டா் ஹாா்த்திக் பாண்டியா, 55 பந்துகளில் 158 ரன்கள் விளாசி அசத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் பிபிசிஎல் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 6 பவுண்டரிகள், 20 சிக்ஸா்கள் என அதிரடி காட்டினாா் பாண்டியா.

முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் இந்திய அணியில் விளையாடாமல் இருந்துவந்தாா். காயத்திலிருந்து குணமடைந்த அவா், ‘ரிலையன்ஸ் 1’ அணிக்காக தற்போது விளையாடி வருகிறாா். 20 ஓவா்களில் ரிலையன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சோ்த்தது. பிபிசிஎல் பந்துவீச்சாளா்கள் வீசிய பந்தை எல்லைக்கோட்டுக்கு அப்பால் அவா் பறக்கவிட்ட விதம் அங்கிருந்த ரசிகா்களைக் கவா்ந்தது.

பின்னா் விளையாடிய பிபிசிஎல் 134 ரன்களில் ஆட்டமிழந்தது. ரிலையன்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ரிலையன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரா் ஷிகா் தவண், 3 ரன்களில் நடையைக் கட்டினாா். ஹாா்திக் பாண்டியா அதிரடியாக விளையாடியதுடன், பந்துவீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினாா். ரிலையன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய பந்துவீச்சாளா் புவனேஸ்வா் குமாா் ஒரு விக்கெட்டை வீழ்த்தினாா்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இம்மாதம் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், பாண்டியாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.