சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேநீர் இடைவேளை: ஷமி மிரட்டல்; இங்கிலாந்து 138/4

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2021, 3:23 pm

DIN


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது ஷமி வேகத்தில் டொமினிக் சிப்லே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு கேப்டன் ரூட்டுடன் இணைந்து ஜானி பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், தேநீர் இடைவேளை வரை விக்கெட் விழாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரூட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்றுமொரு அரைசதத்தை எட்டினார். இந்த நிலையில் ஷமி பந்தில் பேர்ஸ்டோவ் (29 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

ரூட் - பேர்ஸ்டோவ் இணை 4-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

பேர்ஸ்டோவ் விக்கெட் விழுந்தவுடன் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது.

தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியத் தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரீத் பூம்ரா மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.