உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோல்விக்கு மேல் தோல்வி: டாஸில் தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி!

டெஸ்டுகளிலும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி, டாஸில் அதிகமுறை தோற்ற இந்திய கேப்டனாக உள்ளார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 11:50 am

DIN

விராட் கோலி ஏராளமான வெற்றிகளைப் பெற்று மிகச்சிறந்த இந்திய கேப்டனாகத் திகழ்ந்தாலும் டாஸ் என்று வரும்போது மட்டும் பயங்கரமாகச் சொதப்பிக்கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் டாஸில் தோற்ற விராட் கோலி, லார்ட்ஸ் டெஸ்டிலும் டாஸில் தோற்றுள்ளார். 

இதுவரை விராட் கோலி இங்கிலாந்தில் தலைமை தாங்கிய எட்டு டெஸ்டுகளிலும் டாஸில் தோற்றுள்ளார். 8-0. கடந்த முறை இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலும் ஐந்து டெஸ்டுகளிலும் டாஸில் தோற்றார் கோலி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் டாஸில் தோல்வியே கிடைத்தது. 

டெஸ்டுகளிலும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி, டாஸில் அதிகமுறை தோற்ற இந்திய கேப்டனாக உள்ளார்.

டெஸ்டுகளில் டாஸ் தோல்வி

விராட் கோலி 36
தோனி - 34

டாஸ்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டுகளில் விராட் கோலி

ஆட்டங்கள் - 16
டாஸ் வெற்றி - 2
டாஸ் தோல்வி - 14
    
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி 11 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணி 10 முறை டாஸில் வென்றுள்ளது. இந்திய அணி 1 முறை மட்டுமே. 

இந்த நிலைமை மாறுமா கோலி?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.