400 ரன்கள் எடுக்க உதவுவாரா ஜடேஜா?: இந்தியா உணவு இடைவேளையில் 346/7
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்க்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோ்த்தாா்.
இன்று ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே ரன் எதுவும் சேர்க்காமல் 129 ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார் ராகுல். இதன்பிறகு இந்த டெஸ்டிலாவது நன்கு விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 1 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ரிஷப் பந்தும் ஜடேஜாவும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 5 பவுண்டரிகள் அடித்த ரிஷப் பந்த், 37 ரன்களில் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். ஷமி ரன் எதுவும் சேர்க்காமல் அலி பந்தில் வீழ்ந்தார்.
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 116 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 31 ரன்கள், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எடுக்க வேண்டும் என்றால் ஜடேஜா தொடர்ந்து விளையாட வேண்டும், கீழ்வரிசை வீரர்களும் அதற்கு உதவவேண்டும். இது சாத்தியமாகுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...