ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆஸி. கேப்டனுக்கு அறுவை சிகிச்சை: டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 10:37 am

DIN

ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்சுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனான ஆரோன் ஃபிஞ்ச்சுக்கு மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடியபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய ஆரோன் ஃபிஞ்ச், இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

ஃபிஞ்ச் எட்டு முதல் பத்து வாரங்களில் குணமாகி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டி20 உலகக் கோப்பையின் ஆரம்ப ஆட்டங்களில் அவர் விளையாடுவார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மேத்யூ வேட் தலைமையில் வங்கேசத்தில் டி20 தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 1-4 எனத் தோற்றது. கடைசி ஐந்து டி20 தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோற்றுள்ளதால், டி20 உலகக் கோப்பையில் ஆரோன் ஃபிஞ்சால் விளையாட முடியாமல் போனால் அது ஆஸி. அணிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். 

ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை இதுவரை வென்றதில்லை. 2010-ல் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.