மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

லார்ட்ஸ் டெஸ்ட்: வெளிநாடுகளில் தனது அதிக ஸ்கோரை எடுத்த ரோஹித் சர்மா

வெளிநாட்டில் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்தே அவருடைய பேட்டிங் திறமை மதிப்பிடப்படும்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:57 am

DIN

ஓர் இந்திய பேட்ஸ்மேன் வெளிநாட்டில் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்தே அவருடைய பேட்டிங் திறமை மதிப்பிடப்படும்.

2019 டெஸ்டுகளில் முதல் தொடக்க வீரராகக் களமிறங்கி வரும் ரோஹித் சர்மா, லார்ட்ஸ் டெஸ்டில் நேற்று 83 ரன்கள் எடுத்தார். இதுவே வெளிநாடுகளில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியுள்ளது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்க்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோ்த்தாா்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 83 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வெளிநாடுகளில் இது அவருடைய அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு, 2015-ல் இலங்கைக்கு எதிராக 79 ரன்கள் எடுத்ததே வெளிநாட்டில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர். எனினும் ரோஹித் சர்மாவால் இதுவரை வெளிநாடுகளில் சதமடிக்க முடியவில்லை. அந்தக் குறையை லார்ட்ஸில் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டர்சனின் பந்துவீச்சு அதை முறியடித்துவிட்டது.

வெளிநாடுகளில் ரோஹித் சர்மா எடுத்த அதிக ரன்கள்

2021-ம் வருடம் - இங்கிலாந்துக்கு எதிராக 83 ரன்கள்
2015 - இலங்கைக்கு எதிராக 79 ரன்கள்
2014 - நியூசிலாந்துக்கு எதிராக 72 ரன்கள்
2018 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63 ரன்கள்*
2015 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 53 ரன்கள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.