தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

டிஎன்பில் போட்டியில் அபாரமாக விளையாடிய சிஎஸ்கே வீரர்கள்

டிஎன்பிஎல் போட்டியில் மூவரும் நன்கு விளையாடி, சிஎஸ்கே அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.

News image
சாய் கிஷோர்
Updated On :16 ஆகஸ்ட் 2021, 8:12 am

DIN

டிஎன்பிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளார்கள். 

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது இது 3-ஆவது முறையாகும்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சேப்பாக் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய திருச்சி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்து வீழ்ந்தது. சேப்பாக் அணியின் விக்கெட் கீப்பரான என். ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் பேட்ஸ்மேன்களில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஹரி நிஷாந்த் (திண்டுக்கல்), என். ஜெகதீசன் (சேப்பாக்) ஆகிய இருவரும் டிஎன்பிஎல் போட்டியில் அபாரமாக விளையாடியுள்ளார்கள். ஹரி நிஷாந்த் 9 ஆட்டங்களில் 368 ரன்கள் ( 4 அரை சதங்கள், 23 சிக்ஸர்கள்) எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். என். ஜெகதீசன், 10 ஆட்டங்களில் 336 ரன்கள்  ( 3 அரை சதங்கள், 12 சிக்ஸர்கள்) எடுத்து 3-ம் இடம் பிடித்துள்ளார். 

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள இடக்கை பந்துவீச்சாளரான சாய் கிஷோர் (சேப்பாக்), 7 ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள் (எகானமி - 5.85)எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக ஹரி நிஷாந்த், என். ஜெகதீசன், சாய் கிஷோர் ஆகிய மூவரும் துபைக்குச் செல்லவுள்ளார். டிஎன்பிஎல் போட்டியில் மூவரும் நன்கு விளையாடி, சிஎஸ்கே அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள். கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஜெகதீசன் 5 ஆட்டங்களில் விளையாடி 2 இன்னிங்ஸில் 33 ரன்கள் எடுத்துள்ளார். அந்த 33 ரன்களும் ஆர்சிபி அணிக்கு எதிராக எடுத்தார். டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மூவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.