சவால்களிலிருந்து சிராஜ் பின்வாங்க மாட்டார்: கேப்டன் கோலி
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சிராஜ் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தது:
"சிராஜை நன்கு தெரியும் என்பதால் அவரது முனைப்பைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. அவர் எப்போதும் திறனுள்ள பந்துவீச்சாளர். அவருடையத் திறனை ஆதரிக்க நம்பிக்கை வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எந்தவொரு நிலையிலிலும் எந்தவொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அவர் செய்வதன் பலன்களைப் பார்க்கலாம்.
அவரிடம் எப்போதுமே திறன் உள்ளது. நம்பிக்கையும், செயல்படுத்தும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இதுமாதிரியான பந்துவீச்சாளராகத்தான் இருக்கப்போகிறார். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். அவர் பின்வாங்கப்போவதில்லை."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...