உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

3-வது டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?: விராட் கோலி பதில்

2-வது டெஸ்டுக்குப் பிறகு களத்தில் இறங்க அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 12:32 pm

DIN

வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் நாளை தொடங்குகிறது. 

முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்குர், 2-வது டெஸ்டிலிருந்து விலகினார். நான்கு வேகப்பந்து வீச்சாளர் + ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்கிற கூட்டணியே இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தகவல் தெரிவித்தார். இதனால் 2-வது டெஸ்டில் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசினார். 

காயத்திலிருந்து குணமான ஷர்துல் தாக்குர், 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளார். ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்தால் அவருடைய பேட்டிங் திறமை உதவியாக இருக்கும் என கோலி கருதினார். அதனால் தான் முதல் டெஸ்டில் தாக்குர் இடம்பெற்றார். எனினும் 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மா சிறப்பாகப் பந்துவீசியதால் 3-வது டெஸ்டில் இருவரில் யார் இடம்பெறுவார் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

காயம் எதுவும் இருந்தால் தவிர, அணியில் மாற்றம் செய்ய எந்தக் காரணமும் எங்களிடம் இல்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டோம். 2-வது டெஸ்டுக்குப் பிறகு களத்தில் இறங்க அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள். அணியில் 12 பேரைத் தேர்வு செய்து ஆடுகளத்தின் தன்மை, வானிலை ஆகியவற்றை முன்வைத்து 11 வீரர்களைத் தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.