உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்: ஆண்டர்சன் ஆக்ரோஷம்!

21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 11:27 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை 21 ரன்களுக்கு இழந்திருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 2-வது டெஸ்டில் விளையாடிய அதே இந்திய அணி தான் லீட்ஸிலும் விளையாடுகிறது. இதனால் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், கிரைக் ஓவர்டன் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார் கே.எல். ராகுல். அடுத்ததாக 1 ரன்னில் மீண்டும் ஆண்டர்சனுக்கு விக்கெட்டைப் பரிசாக அளித்து வெளியேறினார் புஜாரா. இதுபோதாதென்று 7 ரன்களில் கேப்டன் விராட் கோலியை வீழ்த்தினார் ஆண்டர்சன். 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

இந்திய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 9, ரஹானே 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.