மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஷாஹீன் அப்ரிடி அசத்தல் பந்துவீச்சு: மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்த பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது பாகிஸ்தான்.

News image
ஷாஹீன் ஷா அப்ரிடி (வலது)
Updated On :25 ஆகஸ்ட் 2021, 6:23 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது பாகிஸ்தான்.

கிங்ஸ்டனில் நடைபெற்ற டெஸ்டில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஃபவாத் அலாம் 124 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது. ஷாஹீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் எடுத்தது. 27.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் 2-வது டெஸ்டை வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 329 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான சவாலை எதிர்கொண்ட மே.இ. தீவுகள் அணி 4-ம் நாள் முடிவில் 19 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்தது. கிரைக் பிராத்வெயிட் 17, அல்ஸாரி ஜோசப் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

எனினும் கடைசி நாளில் மே.இ. தீவுகள் அணி, 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜேசன் ஹோல்டர் 47 ரன்கள் எடுத்தார். ஷாஹீன் ஷா அப்ரிடி 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது டெஸ்டை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்  தொடரை 1-1 என சமன் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷாஹீன் ஷா அப்ரிடி வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.