ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸ் கால்கள் பக்கவாதத்தால் செயலிழப்பு

இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள்...

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 11:31 am

DIN

இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் கிறிஸ் கேர்ன்ஸ் விளையாடியுள்ளார். 1989-ல் அறிமுகமாகி, 2006 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார். 

கேன்பராவில் கிறிஸ் கேர்ன்ஸுக்குச் சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. 

இந்நிலையில் கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

அறுவைச் சிகிச்சையின்போது கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன. முதுகுத்தண்டில் ஸ்டிரோக் ஏற்பட்டதால் அவருடைய கால்கள் செயலிழந்து விட்டன. தற்போது கேன்பராவில் உள்ள மருத்துவமனையில் கேர்ன்ஸுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது என கேர்ன்ஸின் வழக்கறிஞர் ஆரோன் லாயிட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.