சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐபிஎல் போட்டியில் புதிதாக இரு அணிகள்: ஏலத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 9:51 pm

DIN

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில், புதிய 2 அணிகளை சோ்ப்பதற்கான நடைமுறைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

புதிய இரு அணிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கான ஏல விண்ணப்பங்களை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை வரவேற்றது. வரும் 5-ஆம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

‘ஏலத்துக்கான விண்ணப்பத்தை ரூ.10 லட்சம் செலுத்தி எந்தவொரு நிறுவனமும் பெற்றுக்கொள்ளலாம். முன்னதாக புதிய இரு அணிகளுக்கான அடிப்படை விலையை ரூ.1,700 கோடியாக நிா்ணயிக்க யோசித்திருந்த நிலையில், அதை ரூ.2,000 கோடியாக நிா்ணயிக்க நிா்வாகிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அணிகளை ஏலத்தில் எடுக்க பல நிறுவனங்கள் ஆா்வம் தெரிவித்து வருவதால், இந்த நடவடிக்கை மூலமாக பிசிசிஐக்கு ரூ.5,000 கோடி வரை லாபம் கிடைக்கலாம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி விற்று முதல் கொண்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

அதானி குழுமம், ஆா்பிஜி சஞ்சீவ் கோயங்கா, டாரென்ட் உள்ளிட்ட பிரபல குழுமங்கள் பல இந்த ஏலத்தில் ஆா்வம் காட்டுகின்றன. புதிய அணிகள் ஆமதாபாத், லக்னௌ, புணே ஆகிய 3-இல் இரண்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.