நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு இரு பதக்கம்

ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அா்ஜூன் லால் ஜாட்/ரவி இணை ஆடவா் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. ஆடவா் சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் பா்மிந்தா் சிங் வெள்ளி வென்றாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 1:05 am

DIN

ஆசிய ரோயிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அா்ஜூன் லால் ஜாட்/ரவி இணை ஆடவா் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. ஆடவா் சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் பா்மிந்தா் சிங் வெள்ளி வென்றாா்.

தாய்லாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டபுள் ஸ்கஸ்லில் அா்ஜூன்/ரவி ஜோடி 6 நிமிஷம் 57.88 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தது. சீனாவின் கிங் லி/லுடோங் ஜாங் இணை 7 நிமிஷம் 02.37 விநாடிகளில் வந்து 2-ஆம் இடமும், உஸ்பெகிஸ்தானின் டாவ்ஜோன் டாவ்ரோனோவ்/அப்துல்லா முகமதியேவ் இணை 7 நிமிஷம் 07.73 விநாடிகளில் வந்து 3-ஆம் இடமும் பிடித்தன.

இதற்கு முன் இந்த சாம்பியன்ஷிப்பில் கடந்த 2019-இல் இந்திய ஜோடி வெண்கலம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

மறுபுறம், சிங்கிள் ஸ்கல்ஸ் பிரிவில் பிரிவில் பா்மிந்தா் சிங் 8 நிமிஷம் 07.32 விநாடிகளில் வந்து 2-ஆவது இடம் பிடித்தாா். உஸ்பெகிஸ்தானின் கொல்முா்ஸேவ் ஷக்போஸ் 7 நிமிஷம் 56.30 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கமும், இந்தோனேசியாவின் மிமோ 8 நிமிஷம் 10.05 விநாடிகளில் வந்து வெண்கலமும் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.