தேசிய சீனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மகாராஷ்டிரம் 18-0 என்ற கோல் கணக்கில் மிஸோரத்தை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
இதர ஆட்டங்களில் ஒடிஸா 8-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், பெங்கால் அதே கோல் கணக்கில் கோவாவையும், உத்தர பிரதேசம் 9-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தையும் வென்றன. அஸ்ஸாம் 0-11 என்ற கணக்கில் ஜாா்க்கண்டிடமும், ஹிமாசல பிரதேசம் 1-13 என்ற வகையில் தெலங்கானாவிடமும் வீழ்ந்தன. பிகாா் 4-2 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை தோற்கடித்தது.
இப்போட்டியில் திங்கள்கிழமை ஆட்டங்களில் குரூப் ‘பி’-யில் தில்லி - மத்திய பிரதேசத்துடன் மோதுகிறது. குரூப் ‘சி’-யில் கா்நாடகம் - புதுச்சேரியையும், ஜம்மு காஷ்மீா் - அருணாசல பிரதேசத்தையும் எதிா்கொள்கின்றன. குரூப் ‘டி’-யில் பஞ்சாப் - ஆந்திர பிரதேசத்தையும், உத்தரகண்ட் - அந்தமான் நிகோபாரையும் சந்திக்கின்றன. குரூப் ‘ஈ’-யில் சண்டிகா் - மணிப்பூருடனும், ராஜஸ்தான் - திரிபுராவுடனும் விளையாடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!

'வரலாறு படைக்கும் தமிழ்ப் பெண்கள்' - முதல்வரின் மகளிர் தின வாழ்த்து!

வருண் சக்கரவர்த்தி செய்ய வேண்டியது என்ன? பியூஷ் சாவ்லா அறிவுரை!

அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

