பாலியல் வன்கொடுமைப் புகார்: பிரபல கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு

காவல்துறையினரிடம் புகார் அளிக்க உறவினர் ஒருவர் முயன்றபோது அவரை யாசிர் ஷா மிரட்டியதாகவும்...
யாசிர் ஷா (வலது)
யாசிர் ஷா (வலது)

14 வயதுப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

35 வயது யாசிர் ஷா, பாகிஸ்தானுக்காக 46 டெஸ்டுகள், 25 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் 14 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் யாசிர் ஷா மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14 அன்று யாசிர் ஷாவின் நண்பர், 14 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதுபற்றி காவல்துறையினரிடம் புகார் அளிக்க உறவினர் ஒருவர் முயன்றபோது அவரை யாசிர் ஷா மிரட்டியதாகவும் இஸ்லாமாபாத் ஷாலிமர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் தகவல் அறிக்கையில் யாசிர் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம். முழு விவரங்களும் கிடைத்த பிறகே இதுகுறித்த எங்களுடைய கருத்தைத் தெரிவிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் பற்றி கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com