மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒருமணி நேரம் லிஃப்டில் சிக்கிக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித்: லபுஷேன் என்ன செய்தார் தெரியுமா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்னில் ஹோட்டல் ஒன்றில் சுமார் ஒருமணி நேரம் லிஃப்டில் சிக்கிக்கொண்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 டிசம்பர் 2021, 4:11 pm

DIN


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்னில் ஹோட்டல் ஒன்றில் சுமார் ஒருமணி நேரம் லிஃப்டில் சிக்கிக்கொண்டுள்ளார்.

லிஃப்டில் சிக்கிக்கொண்ட விடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். 

லிஃப்டில் அவர் சுமார் 55 நிமிடங்கள் சிக்கிக்கொண்டுள்ளார். லிஃப்டின் கதவைத் திறக்க சக வீரர் மார்னஸ் லபுஷேனும் மறுமுனையிலிருந்து முயற்சித்ததாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்மித் கூறுகிறார்.

மேலும், மீட்புப் பணிகளுக்கு மத்தியில் ஸ்மித்துக்கு லபுஷேன் சாக்லெட் கொடுக்கும் காட்சிகளும் அந்த ஸ்டோரியில் பதிவாகியுள்ளன.

இறுதியாக பெரும் முயற்சிக்குப் பிறகு ஸ்மித் லிஃப்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஹோட்டல் அறைக்குச் சென்ற பிறகு, அந்தத் தகவலைப் பதிவிடுவதற்காகவும் ஒரு ஸ்டோரியை ஸ்மித் இணைத்துள்ளார்.

முன்னதாக, மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.