ஐபிஎல் ஏலத்துக்கு 8 தமிழக வீரர்கள் தேர்வு: முழு விவரம்!

2020 ஐபிஎல் போட்டியில் 11 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். அவர்களில்...
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் கிஷோர்
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் சாய் கிஷோர்
Updated on
2 min read

இந்த வருட ஐபிஎல் போட்டியின் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 292 வீரர்கள் அடங்கிய ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியலில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

2020 ஐபிஎல் ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில்  வருண் சக்ரவர்த்தி, எம். சித்தார்த்தை கொல்கத்தா அணியும் சாய் கிஷோரை சிஎஸ்கேவும் தேர்வு செய்தன. ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித், முகமது, அபினவ் ஆகிய 7 தமிழக வீரர்களை எந்த அணியும் தேர்வு செய்யாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்தமுறை அப்படி இருக்க வாய்ப்பில்லை.

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

2020 ஐபிஎல் போட்டியில் 11 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். அவர்களில் முரளி விஜய்யும் எம். சித்தார்த்தும் அவரவர் அணிகளால் தக்கவைக்கப்படவில்லை. எனினும் எம். சித்தார்த் 2021 ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஏலப்பட்டியலில் முரளி விஜய்யின் பெயர் இடம்பெறவில்லை. 

2021 ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் - அடிப்படை விலை

1. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
2. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
3. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
4. சோனு யாதவ் - ரூ. 20 லட்சம்
5. அருண் கார்த்திக் - ரூ. 20 லட்சம்
6. ஜி. பெரியசாமி - ரூ. 20 லட்சம்
7. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம்
8. எம். முகமது - ரூ. 20 லட்சம் 

2021 ஐபிஎல் போட்டிக்காக அணிகளால் தக்கவைக்கப்பட்ட தமிழக வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி

2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி

3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி

4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி

5. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்

6. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்

7. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்
8. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி
9. சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்

2020 ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்

1. வருண் சக்ரவர்த்தி - கேகேஆர் - ரூ. 4 கோடி
2. சாய் கிஷோர் - சிஎஸ்கே - ரூ. 20 லட்சம்
3. எம். சித்தார்த் - கேகேஆர் - ரூ. 20 லட்சம்

2020 ஐபிஎல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி

2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி

3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி

4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி

5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி

6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்

7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்

8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்
9. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி
10. சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்
11. எம் சித்தார்த் - கொல்கத்தா - ரூ. 20 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com