யார் பண்ண வேலை இது?: அஸ்வின் மனைவி கேள்வி!
விஜய்க்குப் பதிலாக அஸ்வினின் முகத்தை வைத்து மாற்றப்பட்டுள்ள மாஸ்டர் போஸ்டரை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


விஜய்க்குப் பதிலாக அஸ்வினின் முகத்தை வைத்து மாற்றப்பட்டுள்ள மாஸ்டர் போஸ்டரை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
சென்னையில் தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி, 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் சதத்துடன் 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 429 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் 2-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை டெஸ்டில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அஸ்வின் இடம்பெற்றுள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, மாஸ்டர் போஸ்டரை வைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளது. விஜய்க்குப் பதிலாக அஸ்வின் முகம் மாற்றப்பட்டு, மாஸ்டரின் போஸ்டரில் இடம்பெற்றிருந்த வாசகங்களும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, யார் பண்ண வேலை இது என வேடிக்கையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டர், அஸ்வினுக்குப் பொருத்தமாக உள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...