தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக பிரவீன் ஆம்ரே நியமனம்

இந்தியத் திறமைகளைக் கொண்டது எங்கள் அணி. பயிற்சியாளர் தேர்விலும் அதையே கடைப்பிடிக்கிறோம்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக பிரவீன் ஆம்ரே நியமனம்

தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

2020 ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தை அடைந்தது. 

இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2014-19 வரை தில்லி கேபிடல்ஸ் அணியின் திறமைகளைக் கண்டறியும் குழுவின் தலைவராக இருந்தார். 

பிரவீன் ஆம்ரே, இந்திய அணிக்காக 11 டெஸ்டுகள், 37 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மும்பை அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி மூன்று ரஞ்சி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார். 

இந்தியத் திறமைகளைக் கொண்டது எங்கள் அணி. பயிற்சியாளர் தேர்விலும் அதையே கடைப்பிடிக்கிறோம். ஆம்ரே அளவுக்கு இந்திய உள்ளூர் கிரிக்கெட் பற்றி அறிந்தவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். ஷ்ரேயஸ், ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் தில்லி அணிக்குத் தேர்வாக முக்கியக் காரணமாக ஆம்ரே இருந்துள்ளார். அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும் என தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி திராஜ் மல்ஹோத்ரா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com