தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு, ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 243/7

ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

News image

ஸ்மித்

Updated On :18 ஜனவரி 2021, 5:21 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 66.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுசேன் 108, பெயின் 50, கிரீன் 47, வேட் 45 ரன்களும் எடுத்தார்கள். நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. ஷர்துல் தாக்குர் 67, வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்தார்கள். ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று, ஆஸ்திரேலிய அணி விரைவாக ரன்கள் குவித்து வருகிறது. 4-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 66.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 55, வார்னர் 48 ரன்கள் எடுத்துள்ளார்கள். சிராஜ், ஷர்துல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வாஷிங்டன் 1 விக்கெட் எடுத்தார். இதன்பிறகு மழையால் ஆட்டம் குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.