பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி நாளை (ஜன.19) தேர்வு

​இங்கிலாந்துடனான 4 டெஸ்ட் ஆட்டங்களில் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை மட்டும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்கிறது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 4:52 pm

DIN


இங்கிலாந்துடனான 4 டெஸ்ட் ஆட்டங்களில் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை மட்டும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்வு செய்கிறது.

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்குப் பிறகு இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 

இதில், முதலிரண்டு ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக சேத்தன் சர்மா தலைமையிலான தலைமை தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை கூடுகிறது.

இதனால், காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில்/ஆட்டத்திலிருந்து விலகியுள்ள இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜாஸ்பிரீத் பூம்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், ஹனுமா விஹாரி உள்ளிட்டோர் மீது கவனம் அதிகரித்துள்ளது. சையது முஷ்டக் அலி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக புவனேஷ்வர் குமாரும் சிறப்பாக விளையாடி வருகிறார். கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பவுள்ளார். 

முன்னணி வீரர்கள் அணிக்குத் திரும்பினால், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் மீண்டும் அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்வியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 5-9, சென்னை
2-வது டெஸ்ட்: பிப்ரவரி 13-17, சென்னை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.