எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மும்பை இந்தியன்ஸிலிருந்து மலிங்கா விடுவிப்பு

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :20 ஜனவரி 2021, 2:13 pm

DIN


மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் லசித் மலிங்கா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸுக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்தவர் லசித் மலிங்கா. அவர் 2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதவிர ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் கூல்டர் நைல், மிட்செல் மெக்லனான உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றபடி கிறிஸ் லின், குயின்டன் டி காக், கைரன் போலார்ட், பாண்டியா சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள்:

லசித் மலிங்கா, மிட்ச் மெக்லனான், ஜேம்ஸ் பேட்டின்சன், நாதன் கூல்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், பிரின்ஸ் பால்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.