மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தல்: முதல் டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2021, 7:58 am

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.

கராச்சியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸில் 100.3 ஓவர்களில் 245 ரன்கள் எடுத்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் என்கிற நிலையில் கடைசி நான்கு விக்கெட்டுகளை 11 ரன்களுக்கு இழந்தது. பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான நுமான் அலி 5, யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் முதல் டெஸ்டை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.