எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை அறிவித்தது பிசிசிஐ: நவம்பரில் ரஞ்சி கிரிக்கெட்

2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ சனிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 1:54 pm

DIN


2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ சனிக்கிழமை வெளியிட்டது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு அனைத்துத் தொடர்களுக்குமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சீசன் செப்டம்பர் 21-ம் தேதி மகளிர் ஒருநாள் லீக்கிலிருந்து தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 27-இல் மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி தொடங்குகிறது.

சையது முஷ்டக் அலி டி20 தொடர் அக்டோபர் 20-இல் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் நவம்பர் 12-இல் நடைபெறுகிறது.

கடந்தாண்டு ரத்து செய்யப்பட்ட ரஞ்சி கோப்பை நிகழாண்டில் வரும் நவம்பர் 16-இல் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 19 வரை 3 மாதங்கள் நடைபெறவுள்ளன.

இதன்பிறகு விஜய் ஹசாரே தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது.

இப்படியாக நிகழாண்டில் மொத்தம் 2,127 உள்நாட்டு போட்டிகள் விளையாடப்படவுள்ளன.

அட்டவணை முழு விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.