47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனி பிறந்தநாளில் கம்பீருக்கு தேவைதானா இது?

மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளான இன்று (புதன்கிழமை) கௌதம் கம்பீர் பேஸ்புக் பக்கத்தில் முகப்புப் படங்களை மாற்றி விமரிசனங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

News image
Updated On :7 ஜூலை 2021, 1:40 pm

DIN


மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளான இன்று (புதன்கிழமை) கௌதம் கம்பீர் பேஸ்புக் பக்கத்தில் முகப்புப் படங்களை மாற்றி விமரிசனங்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலிருந்து தவிர்க்க முடியாத வெற்றி கேப்டன் மகேந்திர சிங் தனது 40-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரசிகர்கள் நள்ளிரவு 12 மணி முதல் தோனியின் பிறந்தநாளைக் கொண்டாடித் தள்ளி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் உலகமும் தோனிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தான் அரைசதம் அடித்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் முகப்புப் படமாக மாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து, 2007 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடிய புகைப்படத்தையும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனி அடித்த கடைசி சிக்ஸர் மட்டுமே வெற்றிக்குக் காரணமில்லை, உலகக் கோப்பை வெல்வதற்கு தோனி மட்டுமே காரணமில்லை என கம்பீர் ஏற்கெனவே பலமுறை கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், தோனியின் பிறந்தநாளன்று குறிப்பாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை கம்பீர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடம் விமரிசனத்தை சம்பாதித்து வருகிறது.

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.