மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: எதிரணியில் விளையாடும் வாஷிங்டன் சுந்தர்!

பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார்...

News image
Updated On :20 ஜூலை 2021, 10:15 am

DIN

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4 அன்று தொடங்குகிறது.

கவுன்டி செலக்ட் XI அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. டர்ஹமில் இன்று தொடங்கியுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். விராட் கோலி இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் தேர்வாகியுள்ளார். 

ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ராகுல், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கவுன்டி செலக்ட் XI அணியில் இந்திய வீரர்களான அவேஷ் கானும் வாஷிங்டன் சுந்தரும் இடம்பெற்றுள்ளார்கள்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.