/

2-வது ஒருநாள்: இலங்கை முதலில் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 262/9 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 263/3 ரன்களை எடுத்து வென்றது. கேப்டன் தவான் ஆட்டமிழக்காமல் 86 ரன்களை எடுத்தார். 

கொழும்பில் இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் இசுரு உடானாவுக்குப் பதிலாக கசுன் ரஜிதா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.