பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹிந்தி பேசத் தெரியாமல் ஏற்பட்ட அனுபவம் பற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின்

கனா படம் பார்க்கும்போது பெரிய குறைகள் தெரியவில்லை.

News image
Updated On :9 ஜூன் 2021, 11:39 am

DIN

தமிழ்நாட்டுக்கு வெளியே ஹிந்தி தெரியாவிட்டால் தண்ணீரிலிருந்து வெளியே வந்த மீனின் நிலைமைதான் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டியை வெளியிட்டுள்ளார். அப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் பற்றி அஸ்வின் கூறியதாவது:

ஹிந்தி தெரியாமல் ஏற்படும் அனுபவத்தை தேசிய கிரிக்கெட் அகாதெமியிலும் (என்சிஏ) இந்திய அணியிலும் நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன். ஹிந்தி எழுதிப் படிக்கத் தெரியும். பேச வராது. நம்மூரில் பேசிப் பழக்கம் இல்லை. தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே செல்லும்போது, ஹிந்தி தெரியாவிட்டால் தண்ணீரிலிருந்து வெளியே வந்த மீனின் நிலைமைதான். இதை கனா படத்தில் வித்தியாசமாக மாற்றியிருந்தார்கள். தமிழ் தெரியாதது பலவீனம், இருவருக்குத் தமிழ் தெரிந்தால் அதைப் பலமாக மாற்றலாம் என்பதை ஸ்டம்பிங் செய்து காண்பித்திருப்பார் சிவகார்த்திகேயன். எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடித்தது. கனா படம் பார்க்கும்போது பெரிய குறைகள் தெரியவில்லை. படக்குழுவினர் எப்போதும் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். கனா படத்துக்காக நான் பயிற்சியளிப்பதாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னிடம் கேட்டிருந்தார். ஆனால் நான் பயணத்தில் இருந்ததால் முடியாமல் போய்விட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.