ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஷமி, இஷாந்த் மிரட்டல்: உணவு இடைவேளையில் நியூசிலாந்து 135/5

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 5-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2021, 12:45 pm

DIN


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 5-வது நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்களுடனும், ராஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 4-ம் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் தடைபட்டது.

5-ம்  நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். இந்த நெருக்கடியின் விளைவாக டெய்லர் 11 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரி நிகோல்ஸை 7 ரன்களுக்கு இஷாந்த் சர்மா ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரிலேயே வாட்லிங்கை (1) போல்டாக்கி அசத்தினார் ஷமி.

இதன்பிறகு, வில்லியம்சனும், காலின் டி கிராண்ட்ஹோமும் உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்தனர். 5-ம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 82 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.