ஷமி 4 விக்கெட்டுகள்: நியூசிலாந்து 249 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து 5-ம் நாள் உணவு இடைவேளையில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 82 ரன்கள் பின்தங்கியிருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு முகமது ஷமி மீண்டும் மிரட்டத் தொடங்கினார். அதிரடி காட்ட முயற்சித்த காலின் டி கிராண்ட்ஹோமை முதலில் ஆட்டமிழக்கச் செய்தார் ஷமி. தொடர்ந்து களமிறங்கிய கைல் ஜேமிசன் துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். கேன் வில்லியம்சனும் இணைந்து துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலாக இருந்த ஜேமிசனை பவுன்சர் பந்து மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் ஷமி.
அடுத்து களமிறங்கிய டிம் சௌதியும் ரன் குவிப்பில் ஈடுபட வில்லியம்சன் அரைசதத்தை நெருங்கினார். ஆனால், அவரை (49 ரன்கள்) இஷாந்த் சர்மா வீழ்த்தினார். ஜேமிசன், வில்லியம்சன் விக்கெட் முக்கியமான விக்கெட்டுகளாக அமைந்தன.
நீல் வேக்னர் ரன் ஏதும் எடுக்காமல் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்ஸர் அடித்த சௌதி அதே ஓவரில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், 249 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...