பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்குத் தேர்வான ஆஸி. வீரர்: சர்வதேச டி20யில் அறிமுகம்

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ரிலி மெரிடித்தை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்து...

News image

படம் - instagram.com/rileymeredith_/

Updated On :3 மார்ச் 2021, 6:08 am

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ரிலி மெரிடித்தை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது பஞ்சாப் அணி.

காரணம், இதுவரை சர்வதேச டி20 ஆட்டம் எதிலும் மெரிடித் விளையாடியதில்லை.

பிபிஎல் டி20 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி கவனம் ஈர்த்துள்ளார் 24 வயது மெரிடித். ஹரிகேன்ஸ் அணிக்காக 34 ஆட்டங்களில் விளையாடி 43 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 8.06. வேகமாகப் பந்துவீசி, பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுத்து ரன்களைக் கட்டுப்படுத்துவதால் பஞ்சாப் அணி பெரிய தொகைக்கு அவரைத் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் வெலிங்டனில் இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் மெரிடித் தேர்வாகியுள்ளார். இதன்மூலம் சர்வதேச ஆட்டத்தில் முதல்முறையாகப் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.