கடைசிக்கட்டத்தில் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்த ஆலன்: டி20 தொடரை வென்றது மே.இ. தீவுகள் அணி! (விடியோ)
12 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது தனஞ்ஜெயா வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து...


இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
கூலிட்ஜில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமல் 54 ரன்களும் அஷென் பண்டரா 44 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஃபேபியன் ஆலன் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 13 ரன்கள் மட்டும் கொடுத்தார்.
இதன்பிறகு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஃபேபியன் ஆலன் கடைசிக்கட்டத்தில் 6 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்து அசத்தினார். 12 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது தனஞ்ஜெயா வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து வெற்றியை எளிதாக்கினார் ஆலன். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே கிடைத்தது.
டி20 தொடரை 2-1 என மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது. புதன் கிழமை முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...