லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத்தைத் தொடர்ந்து இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு

சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2021, 7:31 am

DIN


சச்சின், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் வீரர் இர்பான் பதானுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா அறிகுகள் இல்லாததால் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள் என்று இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

36 வயது இர்பான் பதான், இந்திய அணிக்காக 29 டெஸ்டுகள், 120 ஒருநாள், 24 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2012-ல் விளையாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.