/

ஒருநாள், டி20 தொடர்கள்: ஜூலையில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி

ஜூலை மாதத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளதாக...

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:12 pm

DIN

ஜூலை மாதத்தில் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி. இந்நிலையில் முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்துள்ளார். 

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:

இலங்கைக்கு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை எங்கு நடத்தப் போகிறோம் என்பதை இப்போது சொல்லமுடியாது என்றார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இதனால் இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.