விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா பாதிப்பால் தாயை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தனது தாயை இழந்துள்ளார் இந்திய வீராங்கனையான பிரியா புனியா.

News image
Updated On :18 மே 2021, 8:10 am

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தனது தாயை இழந்துள்ளார் இந்திய வீராங்கனையான பிரியா புனியா.

கரோனா 2-வது அலையில் பல கிரிக்கெட் வீரர்கள் அதிகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். முன்னாள் வீரர்களான ஆர்.பி. சிங்கும் பியூஷ் சாவ்லாவும் தங்களது தந்தையை கரோனா பாதிப்பின் காரணமாக இழந்துள்ளார்கள். கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

இதே நிலைமை மற்றொரு கிரிக்கெட் வீராங்கனைக்கும் ஏற்பட்டுள்ளது. 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரியா புனியா, 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

பிரியா புனியாவின் தாய் சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாய் இறந்த தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் பிரியா புனியா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.