இலங்கை தொடர்: இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக...


இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது.
இந்நிலையில் ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது. கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடுவதால் இலங்கைக்கு எதிரான தொடர்களில் முன்னணி இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள். இதனால் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்குச் செல்லும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இலங்கை செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிடைத் தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே தேர்வாகவும் வாய்ப்புள்ளது.
இலங்கையில் இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் ஜூலை 13 அன்றும் டி20 தொடர் ஜூலை 22 அன்றும் தொடங்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...