காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகக் கோப்பைக்கு வெளியே நியூசிலாந்திடம் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு வெளியே நிலைமை வேறாக உள்ளது....

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:34 am

DIN

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணிக்குப் பெரிய சிக்கலாக உள்ளது நியூசிலாந்து. ஆனால் இதர டி20 ஆட்டங்களில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 3 ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

ஆனால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு வெளியே நிலைமை வேறாக உள்ளது. இந்திய அணிதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. 

டி20 ஆட்டங்களில் இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியதில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் நியூசிலாந்து 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடிய டி20 ஆட்டங்கள்

உலகக் கோப்பைப் போட்டியில்: 

ஆட்டங்கள் 3
இந்தியா வெற்றி 0
நியூசிலாந்து வெற்றி 3 

உலகக் கோப்பைப் போட்டிக்கு வெளியே: 

ஆட்டங்கள் 15
இந்தியா வெற்றி 9
நியூசிலாந்து வெற்றி 6 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.