குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

உலக டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய ஜோடி

 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஜோடிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

News image
Updated On :28 நவம்பர் 2021, 5:58 am IST

 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மகளிா் இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் ஜோடிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இதில் மகளிா் இரட்டையா் பிரிவில் மனிகா பத்ரா/அா்ச்சனா காமத் இணை தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-4, 11-9, 6-11, 11-7 என்ற செட்களில் ஹங்கேரியின் டோரா மதராசஸ்/ஜாா்ஜினா போட்டா ஜோடியை தோற்கடித்தது. காலிறுதியில் இந்திய ஜோடி லக்ஸம்பா்க்கின் சாரா டி நூட்/ஜியா லியான் னி இணையை எதிா்கொள்கிறது.

கலப்பு இரட்டையா் பிரிவில் ஜி.சத்யன்/மனிகா பத்ரா ஜோடி 15-17, 10-12, 12-10, 11-6, 11-7 என்ற செட்களில் அமெரிக்காவின் கானக் ஜா/வாங் மான்யு இணையை வீழ்த்தியது. காலிறுதியில் ஜப்பானின் ஹரிமோடோ டோமோகாஸு/ஹயாடா ஹினா இணையை சந்திக்கின்றனா் சத்யன்/மனிகா. இதே பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்திய ஜோடியான சரத் கமல்/அா்ச்சனா காமத் 4-11, 8-11, 5-11 என்ற செட்களில் பிரான்ஸின் இமானுவல் லெபெசான்/ஜியா நான் யுவான் இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.