பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய மும்பை என்ன செய்ய வேண்டும்?

அபுதாபியில் நடைபெறும் இன்றைய இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை நிகழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் வர முடியும்.
மும்பை கேப்டன் ரோஹித் சர்மா
மும்பை கேப்டன் ரோஹித் சர்மா

அபுதாபியில் நடைபெறும் இன்றைய இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல சாதனைகளை நிகழ்த்தினால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் வர முடியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றும் வரும் ஐபிஎல் தொடரில் கிட்டத்திட்ட பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் அணிகள் உறுதியாகிவிட்டது. தற்போது முதலிடத்தில் தில்லி(20 புள்ளி), இரண்டாம் இடத்தில் சென்னை(18), மூன்றாம் இடத்தில் பெங்களூரு(16), நான்காம் இடத்தில் கொல்கத்தா(14) உள்ளன.

முதல் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் செல்வதை உறுதி செய்துவிட்ட நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானை 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்றதன் மூலம் நான்காம் இடத்தை கிட்டத்திட்ட உறுதி செய்துள்ளது.

இருப்பினும், இன்றைய மும்பை - ஹைதராபாத் ஆட்டத்தின் முடிவுக்கு பின்னரே முழுமையாக தெரியவரும்.

தற்போது 6வது இடத்தில் இருக்கும் மும்பை அணியின் நெட் ரன் ரேட் -0.048 ஆக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஹைதராப்பாதை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே 4வது இடத்திற்கு முன்னேற முடியும்.

நான்காவது இடத்தில் உள்ள கொல்த்தாவை(ரன் ரேட் 0.587) பின்னுக்கு தள்ள, இன்றைய ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங் செய்தால் 250 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். பின்னர் பேட்டிங் செய்யும் ஹைதராபாத் அணியை சுமார் 170 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.

ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் எந்த அணியும் வெற்றி பெற்றதில்லை என்பதால் மும்பை அணிக்கு பின்னடைவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com