47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய அணியுடன் இணைவதில் தோனி உற்சாகமாக உள்ளார்: கோலி

இந்திய அணியுடன் மீண்டும் இணைவதில் மகேந்திர சிங் தோனி உற்சாகமாக இருப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :18 அக்டோபர் 2021, 6:24 am

DIN


இந்திய அணியுடன் மீண்டும் இணைவதில் மகேந்திர சிங் தோனி உற்சாகமாக இருப்பதாக இந்திய கேப்டன் விராட் கோலி சனிக்கிழமை தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பையையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கேப்டன் விராட் கோலி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

டி20 உலகக் கோப்பைக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கோலி கூறியது: 

"நிறைய அனுபவம் கொண்டவர் தோனி. இந்திய அணியுடன் மீண்டும் இணைவதில் அவர் உற்சாகமாக உள்ளார். எங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியபோது அவர் எங்களுக்கு எப்போதுமே ஆலோசகராக இருந்துள்ளார். அதைத் தொடர அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இத்தனை ஆண்டுகளில் அவர் சம்பாதித்த அனுபவங்கள் மற்றும் ஆட்டம் குறித்த அவருடனான உரையாடல்கள்தான் அவை. அத்தகைய தகவல்கள் மற்றும் நுட்பமான விரிவுரைகள் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதங்கள் ஆட்டத்தினை மேம்படுத்த உதவும். அவர் எங்களுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு மகிழ்ச்சியே. அவருடைய இருப்பு அணியின் மனஉறுதி மற்றும் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும்."

புதிய பயிற்சியாளர் பற்றி பேசியது:

"பயிற்சியாளர் விஷயத்தில் உள்ளபடியே என்ன நடக்கிறது என்பது பற்றி எதுவும் தெரியாது. அதுகுறித்து எவருடனும் விரிவான ஆலோசனைகள் நடைபெறவில்லை."

பாகிஸ்தானுடனான தொடக்க ஆட்டம் குறித்து கூறியது:

"எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், அந்த ஆட்டம் பற்றி எதுவும் தோன்றவில்லை. எப்போதும் மற்ற ஆட்டங்களைப் போலவே அதையும் நான் அணுகுவேன். இந்த ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு இருப்பது எனக்குத் தெரியும். இந்த ஆட்டத்தில் கூடுதலாக எதையும் வெளிப்படுத்துவோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை இதுவொரு கிரிக்கெட் ஆட்டம். அதை நல்ல முறையில் விளையாட வேண்டும். ரசிகர்கள் பார்வையில், இந்தச் சூழல் வெளியிலிருந்து மிகப் பெரியது. வீரர்கள் பார்வையில், இதை தொழில்முறையாகவும், இயல்பாகவுமே அணுகுவோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.